முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

தொடரலை தானியங்கி வாகன வருமானவரி பத்திரம் பெற்றுக்கொள்ளும் முறைமை ஆரம்பித்து வைக்கப்பட்டது

வாகன வருமானவரி பத்திரத்தினை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை  வடக்கு மாகாண மக்கள் இலகுவாக மேற்கொள்ளும் பொருட்டு வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் முதன் முறையாக தொடரலை தானியங்கி வருமானவரி செலுத்தும் முறைமை ( Online e-Revenue License System) பரீட்சார்த்தமாக உருவாக்கப்பட்டு வடக்கு மாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சுக் கட்டடத் தொகுதியில்  மக்கள் பாவனைக்காக நிறுவப்பட்டுள்ளது. வாகன வரி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான தானியங்கி இயந்திரம் பயன்படுத்தப்படும் இம்முறைமையானது இலங்கையில் முதன்முதலாக வடக்கு மாகாணத்திலேயே பரீட்சார்த்தமாக அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்திற்கான தொழில்நுட்ப உதவியினை ஏசியா பவுண்டேசன் வழங்கியுள்ளது. இம் முறைமை மூலமாக பொதுமக்கள் 24 மணிநேரமும் வாகன வருமானவரி பத்திரத்தினை பெற்றுக்கொள்ளமுடியும்.

மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் திருமதி.சுஜிவா சிவதாஸ் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் அங்குராற்பண நிகழ்வு 18 ஜனவரி 2019 அன்று வடக்கு மாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சு கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இம்முறைமையை ஆரம்பித்து வைத்தார். இதன் போது பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, ஏசியா பவுண்டேசன் குழுவினர், வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள், மாகாண அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.