சுகாதார அமைச்சு

டெங்கு நுளம்புப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது

டெங்கு நுளம்புப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பான  கலந்துரையாடல் வடமாகாண சுகாதார அமைச்சின்  கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சின் செயலாளர் திரு சி. திருவாகரன்  தலைமையில் 08 ஜனவரி 2019 அன்று  நடைபெற்றது. 

இக் கலந்துரையாடலில், தேசிய  நுளம்புப் கட்டுப்பாட்டுச் சபையின்  பணிப்பாளர்,  கல்வி அமைச்சின் செயலாளர்,  மாவட்ட செயலாளர்கள்,  மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள்,  உள்ளூராட்சி ஆணையாளரின் பிரதி நிதி,  உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் பிரதி நிதிகள் மற்றும்  சுகாதார திணைக்கள  உத்தியோகத்தர்கள்  ஆகியோர் கலந்துகொண்டார்கள்.