உள்ளூராட்சி அமைச்சு

வலிகாமம் வடக்கு பகுதியில் மேலும் ஒரு தொகுதி காணிகள் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்டன

தையிட்டிப் பகுதியில் தையிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவு J/249 மற்றும் தையிட்டி தெற்கு கிராம சேவகர் பிரிவு J/250 ஆகிய இரண்டு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 19.6 ஏக்கர் காணிகள் 22 ஜனவரி 2019 அன்று மக்கள் பாவனைக்கென விடுவிக்கப்பட்டுள்ளன. 

மேலும் பலாலி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியைச் சேர்ந்த பலாலி தெற்கு J/252 (ஒட்டகப்புலம்) கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 23.5 ஏக்கர் காணிகளும் 23 ஜனவரி 2019 அன்று இராணுவத்தினரால் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்டன.

இவற்றிற்கான அனுமதிப்பத்திரங்கள் 515 படைப்பிரிவின் இராணுவ கட்டளைத்தளபதியால்  வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் சி.சிவசிறியிடம் கையளிக்கப்பட்டன.