கல்வி அமைச்சு

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தைப்பொங்கல் விழா மல்லாவியில் நடைபெற்றது

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தைப்பொங்கல் விழா மல்லாவியில் அமைந்துள்ள யோகாம்பிகை சமேத யோகபுரநாதர் ஆலயத்தில்  18 ஜனவரி 2019 அன்று  நடைபெற்றது.

வட மாகாண கலாச்சார திணைக்களத்தின்  உதவிப்பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட பண்டாரவன்னியன் ஆவணப்பட வெளியீடும் கலைஞர் கௌரவிப்பும் இடம்பெற்றது. 

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், மேலதிக அரசாங்க அதிபர் திரு.தனபாலசிங்கம், பிரதேச செயலாளர்கள், கலாச்சார உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.