முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

யாழ் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களுடனான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில்...

வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்  அவர்களுக்கும் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 18 ஜனவரி 2019 அன்று இடம்பெற்றது.

உள்ளூராட்சி மன்றங்களை வலுப்படுத்த சோலைவரியின் அவசியம் தொடர்பில் சுட்டிக்காட்டிய ஆளுநர் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவான காணிகள் இன்னும் மதிப்பீடு செய்யப்படாது காணப்படுவதால் பிரதேச செயலாளர்கள், நிலஅளவைத் திணைக்களத்தினர், விலை மதிப்பீட்டு திணைக்களம் மற்றும் பிரதேச காணி உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக்கொண்டு யாழ் மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைக்குட்பட்ட காணிகளை விரைவாக மதிப்பீடு செய்து அதற்கான சோலைவரியினை அறவிடுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார். 

அத்துடன் பாதுகாப்பு தரப்பினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை மதிப்பீடு செய்வது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது. 

வெளிநாடுகளில் வசிப்போரின் காணிகளுக்கான வரியினை அறவிடுவது தொடர்பில் இந்த கலந்துரையாடலில் விசேட கவனம் செலுதத்தப்பட்டதுடன் துவிச்சக்கர வண்டிகளுக்கான வரி அறவீடு, கட்டாக்ககாலி நாய்கள் மற்றும் கால்நடைகளுக்கான வரி அறவீடு  தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது. 

ஆளுநரின் செயலாளர் எல். இளங்கோவன், உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் தவிசாளர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.