சுகாதார அமைச்சு

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் ஆண், பெண் விடுதிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது

 width=500மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதிக் கொடை மூலம் நிர்மாணிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்களுக்கான விடுதிக் கட்டிடம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன் அவர்களினதும், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அவர்களினதும் பிரசன்னத்தில் 2018ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 14ந் திகதி திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டிடமானது மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதிக் கொடையின் மூலம் ரூபா 54.8 மில்லியன் செலவின் நிர்மாணிக்கப்பட்டது.

 width=500

 width=500