செயலாளர்

திருமதி.ஆர்.வரதலிங்கம்

செயலாளர்

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு

இல.4, புறூடி ஒழுங்கை, 
புங்கன்குளம் சந்தி  கண்டி வீதி,
அரியாலை, யாழ்ப்பாணம்

 

தொ.பே.: +94-21-222 0880
தொ.நகல்: +94-21-222 0882

மின்னஞ்சல்:
npminagri@yahoo.com

contact1

2019 ஆம் ஆண்டின் அரச முதியோர் இல்லத்தின் நிகழ்வுகள்.

புத்தாண்டு தினத்தன்று ஆரோக்கிய விநாயகர் சமேத நிற்சிங்க வைரவர் ஆலயத்தில் விசேட பூசைகளும் தேசியக் கொடியேற்றலுடனான சத்தியப்பிரமாண நிகழ்வுகளும் மூத்தோர்கள், உத்தியோகத்தர்களால் இணைந்து செயற்படுத்தப்பட்டது. இத் தினத்தில் உள மேம்பாட்டிற்காகவும், மகிழ்வான எதிர்காலத்தை நோக்கியதான விழிப்புணர்விற்காகவும் நிகழ்வுகள் ஏற்படுத்தப்பட்டன.

 

 

தைப்பொங்கல் தினத்தன்று விசேட ஆராதனைகளும் தியான நிகழ்வுகளும் இல்லச் சூழலில் ஒழுங்குபடுத்தப்பட்டு, வடிவமைக்கப்பட்டு சமூக நிறுவனங்களின் ஒன்றிணைவுடனும் தமிழ்ப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மூத்தோர்களின் பங்குபற்றுதலுடனான பொங்கல் நிழ்வும் செய்யப்பட்டது.