செயலாளர்

திரு.சி.சத்தியசீலன்
கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்

கல்வி அமைச்சு அலுவலகம்,
செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை

 

தொ.இல: 021-221 9259

தொ.நகல்: 021-222 0794 கைபேசி: 0774933994

மின்னஞ்சல்:

sathiyaseelan1964@gmail.com

பணிக்கூற்று

கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறைசார் செயற்பாடுகளில் ஓருங்கிணைப்பினையும் வழிகாட்டலையும் உறுதிப்படுத்தும் கொள்கைகளை உருவாக்குதலும், தனியாள் விருத்தி கட்டியெழுப்பப்படுவதை உறுதிப்படுத்தலும், வடமாகாணத்தில் சமநிலை ஆளுமையுள்ள சமுதாயத்தை தோற்றுவித்தல்.

செய்திகளும் நிகழ்வுகளும்

கல்வி அமைச்சு

வட மாகாண பாடசாலைகளின் வலய ரீதியான வகைப்படுத்தல்

வட மாகாணத்தில் 1098 பாடசாலைகள் உள்ளன. அவற்றில் 22 தேசிய பாடசாலைகளும் 1070 மாகாண பாடசாலைகளும், 06 தனியார் பாடசாலைகளும் உள்ளடங்குகின்றது.  அதில் 1008 பாடசாலைகள் தற்போது இயங்கி வருகின்றது.

 

பாடசாலைகள் 1AB, 1C, தரம் II, தரம் III ஆகிய வகைகளாக பாடசாலைகள் வகைப்படுத்தப்படுகின்றது.

உயர்தரப்பிரிவில் கணித, விஞ்ஞான பாடத்துறைகளைக் கொண்ட பாடசாலைகள் 1AB பாடசாலைகள் எனவும், உயர்தர வகுப்புக்களில் கணித, விஞ்ஞான பாடத்துறைகளை கொண்டிராது கலைத் துறையை கொண்ட பாடசாலைகள் 1C பாடசாலைகள் எனவும், தரம் ஒன்று முதல் தரம் 9 வரையான வகுப்புகளை கொண்ட பாடசாலைகள் தரம் II பாடசாலைகள் எனவும் தரம் ஒன்று முதல் தரம் 8 வரையான வகுப்புகளை கொண்ட பாடசாலைகள் தரம் II பாடசாலைகள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.

வடமாகாணத்தில் 12 கல்வி வலயங்கள் காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் 5 வலயங்களும், கிளிநொச்சியில் ஒரு வலயமும், முல்லைத்தீவில் 2 வலயங்களும், மன்னாரில் 2 வலயங்களும் வவுனியாவில் 2 வலயங்களும் காணப்படுகின்றன.

 

வலயம்

தேசிய

மாகாண

தனியார்

மொத்தம்

இயங்கு நிலை

1AB

1C

II

III

யாழ்ப்பாணம்

4

109

3

116

104

17

13

39

35

வலிகாமம்

1

151

2

154

141

16

13

41

71

வடமராட்சி

1

87

0

88

82

11

9

28

34

தென்மராட்சி

1

67

1

69

60

6

6

20

28

தீவகம்

0

77

0

77

64

5

6

20

33

கிளிநொச்சி

2

110

0

112

104

11

16

36

41

மன்னார்

5

87

0

92

90

11

17

28

34

மடு

0

56

0

56

53

2

11

13

27

வவுனியா வடக்கு

0

93

0

93

84

4

8

20

52

வவுனியா தெற்கு

5

107

0

112

100

10

14

29

47

முல்லைத்தீவு

2

65

0

67

65

7

11

24

23

துணுக்காய்

1

61

0

62

61

7

3

15

36

மாகாணம்

22

1070

6

1098

1008

107

127

313

461

 

தரவு மூலம் http://www.edudept.np.gov.lk/zoneschdata.php