செயலாளர்

திரு.சி.சத்தியசீலன்
கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்

கல்வி அமைச்சு அலுவலகம்,
செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை

 

தொ.இல: 021-221 9259

தொ.நகல்: 021-222 0794 கைபேசி: 0774933994

மின்னஞ்சல்:

sathiyaseelan1964@gmail.com

பணிக்கூற்று

கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறைசார் செயற்பாடுகளில் ஓருங்கிணைப்பினையும் வழிகாட்டலையும் உறுதிப்படுத்தும் கொள்கைகளை உருவாக்குதலும், தனியாள் விருத்தி கட்டியெழுப்பப்படுவதை உறுதிப்படுத்தலும், வடமாகாணத்தில் சமநிலை ஆளுமையுள்ள சமுதாயத்தை தோற்றுவித்தல்.

செய்திகளும் நிகழ்வுகளும்

கல்வி அமைச்சு

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் வகுப்பு 1 (அ) தரத்திற்கு நியமனம் செய்தல் - 2019

வடக்கு மாகாண தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் வகுப்பு 1 (அ) தரப் பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் 2018.10.08 ஆம் திகதி கோரப்பட்ட ஆட்சேர்ப்பு விளம்பரத்திற்கு அமைவாக, விண்ணப்பித்தவர்களில் இருந்து தகைமை பெற்றோர் 160 பேர் ஆசிரியர் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 06.08.2018 இல் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட கலைப்பட்டதாரிகளில் காத்திருப்போர் பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள 89 பட்டதாரிகள் உள்ளடங்கலாக 249 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் பதவிக்கான நியமனக் கடிதங்கள் கடந்த 2019.01.26 ஆம் திகதி சனிக் கிழமை காலை 10.00 மணிக்கு யாஃவேம்படி மகளிர் கல்லூரியில் வட மாகாண கௌரவ ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. 

பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்ட பாட ரீதியான ஆசிரியர் விபரம் வருமாறு :- 

இரசாயனவியல் - 005

பௌதிகவியல் - 004

விஞ்ஞானம் - 100

கணிதம் - 036

ஆங்கிலம் - 015

தமிழ் - 036

வரலாறு - 028

குடியியல் - 022

தகவல் தொழில்நுட்பம் - 003

மொத்தம் - 249

நியமனம் செய்யப்பட்டுள்ள 249 பட்டதாரி ஆசிரியர்களினதும் பெயர் விபரங்கள் உள்ளடங்கிய பட்டியல் பாட ரீதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள பாடசாலைகளுடன் வெளியிடப்படுகின்றது