உள்ளூராட்சி அமைச்சு

யாழ் மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்

யாழ் மத்திய பேருந்து நிலையத்தை நவீன மயப்படுத்தப்பட்ட பேருந்து நிலையமாகப் புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

யாழ் நவீன பேருந்து நிலையம் எவ்வாறு அமைய இருக்கின்றது மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் 27 ஜனவரி 2019 அன்று யாழ்ப்பாணம் வருகை தந்த போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்களினால் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

யாழ் பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த அமைச்சர் அவர்களுக்கு யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் அவர்களினால் பேருந்து நிலையத்தின் தற்போதைய அமைப்பில் ஏற்பட இருக்கின்ற மாற்றங்கள், மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள், அதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் விளக்கியிருந்தார்.

இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் மற்றும் வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.