உள்ளூராட்சி அமைச்சு

மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தின் வசமிருந்த காணிகளில் மேலுமொரு தொகுதி விடுவிப்பு

மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த ஒரு தொகுதிக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கான ஆவணங்கள் 54வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி மற்றும் 61வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி  ஆகியோரால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சி.ஏ.மோகன்தாஸிடம் கடந்த 29 ஆம் திகதியன்று மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

மன்னார் மாவட்டத்தில் 54வது படைப்பிரிவின் வசம் இருந்த 9.5 ஏக்கர் காணிகளும்  61வது படைப்பிரிவின் வசம் இருந்த 0.75 ஹெக்டயர் காணிகளுமே இவ்வாறு  விடுவிக்கப்பட்டுள்ளது.