பிரதம செயலாளர் செயலகம்

71 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது

வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் 71 வது சுதந்திர தின கொண்டாட்டம் 2019 பெப்ரவரி 04 ஆம் திகதியன்று பிரதம செயலாளர் செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

தேசிய கொடியை பிரதி பிரதம செயலாளர் - நிர்வாகம், வ.மா திருமதி எஸ்.மோகநாதன் ஏற்றிவைத்தார் மற்றும் வடக்கு மாகாணக் கொடி பிரதிப் பிரதம செயலாளர் - நிதி, வ.மா திரு.பத்மநாதன் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது. 

பிரதம செயலாளர் கொத்தணி அலுவலகம் மற்றும் உள்ளூராட்சி  அமைச்சின் அதிகாரிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.