செயலாளர்

திரு.சி.சத்தியசீலன்
கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்

கல்வி அமைச்சு அலுவலகம்,
செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை

 

தொ.இல: 021-221 9259

தொ.நகல்: 021-222 0794 கைபேசி: 0774933994

மின்னஞ்சல்:

sathiyaseelan1964@gmail.com

பணிக்கூற்று

கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறைசார் செயற்பாடுகளில் ஓருங்கிணைப்பினையும் வழிகாட்டலையும் உறுதிப்படுத்தும் கொள்கைகளை உருவாக்குதலும், தனியாள் விருத்தி கட்டியெழுப்பப்படுவதை உறுதிப்படுத்தலும், வடமாகாணத்தில் சமநிலை ஆளுமையுள்ள சமுதாயத்தை தோற்றுவித்தல்.

செய்திகளும் நிகழ்வுகளும்

கல்வி அமைச்சு

பாடசாலைகளில் தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி அமுல்ப்படுத்தப்படுகின்றது

பாடசாலைகளில் தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கு யோகாசன பயிற்சியை  வாரத்தில் 2 நாட்கள் காலைப்பிரார்த்தனையை தொடர்ந்து அமுல்ப்படுத்த வட மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

 யோகாசன பயிற்சி தொடர்பான காணொளி வட மாகாண கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்டு பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் உள்ள அறிவறுத்தல்களுக்கு அமைய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

அதிபர்கள் இப்பயிற்சிக்கு பொறுப்பான ஆசிரியர் ஒருவரை நியமித்து அவரின் மேற்பார்வையில் 18.02.2019 முதல் பயிற்சிகளை வழங்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.