கல்வி அமைச்சு

பாடசாலைகளில் தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி அமுல்ப்படுத்தப்படுகின்றது

பாடசாலைகளில் தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கு யோகாசன பயிற்சியை  வாரத்தில் 2 நாட்கள் காலைப்பிரார்த்தனையை தொடர்ந்து அமுல்ப்படுத்த வட மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

 யோகாசன பயிற்சி தொடர்பான காணொளி வட மாகாண கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்டு பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் உள்ள அறிவறுத்தல்களுக்கு அமைய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

அதிபர்கள் இப்பயிற்சிக்கு பொறுப்பான ஆசிரியர் ஒருவரை நியமித்து அவரின் மேற்பார்வையில் 18.02.2019 முதல் பயிற்சிகளை வழங்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.