செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

தாதிய உத்தியோகத்தர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன

வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தினால் தாதியர் சேவையின் தரம் - 03 இற்கான நியமனக்கடிதங்கள் 14 பெப்ரவரி 2019 அன்று சுகாதார திணைக்களத்தின் மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டன. 

சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. ஆ.கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 103 தாதிய உத்தியோகத்தர்கள் தமக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர். வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. சி. திருவாகரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

இத் தாதிய உத்தியோகத்தர்களில் 30 பேர் யாழ் மாவட்டத்திற்கும் 16 பேர் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் 17 பேர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் 12 பேர் மன்னார் மாவட்டத்திற்கும் 28 பேர் வவனியா மாவட்டத்திற்கும் நியமனம் செய்யப்பட்டனர்.

இன்று (15.02.2019) அவர்கள் தமக்குரிய வைத்தியசாலைகளில் தமது கடமைகளைப் பொறுப்பேற்கின்றனர்.