சுகாதார அமைச்சு

பாடசாலை போதைப்பொருள் தடுப்பு வாரம் - யாழ்ப்பாணம்

ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம் பாடசாலை போதைப்பொருள் தடுப்பு வாரம் 21.01.2019 தொடக்கம் 25.01.2019 வரை யாழ் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

யாழ் மாவட்ட சுகாதார திணைக்களத்திற்குரிய செயற்பாடுகள் 22.01.2019 இரண்டாம் நாள் பெரும்பாலான பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பாக பாடசாலை வைத்திய அதிகாரி பணிமனையினால் யாழ்பாண மாநகர சபைக்குட்பட்ட யாழ் இந்துகல்லூரி, சென்.ஜோன்ஸ் கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி  உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் பல்வேறு வளவாளர்கள் மூலம் மாணவர்களிற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.