செயலாளர்

திருமதி.ஆர்.வரதலிங்கம்

செயலாளர்

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு

இல.4, புறூடி ஒழுங்கை, 
புங்கன்குளம் சந்தி  கண்டி வீதி,
அரியாலை, யாழ்ப்பாணம்

 

தொ.பே.: +94-21-222 0880
தொ.நகல்: +94-21-222 0882

மின்னஞ்சல்:
npminagri@yahoo.com

contact1

'இணைந்த கைத்தொழில் கரங்கள்' கண்காட்சியும் பயிற்சிப்பட்டறையும்

'இணைந்த கைத்தொழில் கரங்கள்' கண்காட்சியும் பயிற்சிப்பட்டறையும் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 16.02.2019 தொடக்கம் 17.02.2019 வரை நடைபெற்றது.

 

யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகம் இந்திய துணைத்தூதரகத்தின் அனுசரனையுடன் வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் இணை அனுசரனையுடனும் வடமாகாண கல்வி அமைச்சின் முறைசாரா கல்விப்பிரிவுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் சிறுகைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காகவும், புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்காகவும் இந்தியாவில் இருந்து இயந்திர உபகரணங்கள் மற்றும் 17 தொழில் துறை சார்ந்த கைத்தொழில் உற்பத்தியாளர்களை வரவழைத்து வடமாகாணத்திலுள்ள 450 இற்கும் மேற்பட்ட தொழில் முயற்சியாளர்களிற்கு 02 நாட்களிற்கு சிறந்த முறையில் பயிற்சிப்பட்டறை நடாத்தப்பட்டதுடன் சிறந்த முறையில் பயிற்சியை நிறைவுசெய்தவர்களிற்கான சான்றிதழ்களும்  பயிற்சி நிறைவில் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் விருந்தினர்களாக இந்திய துணைத்தூதுவர் யாழ்ப்பாணம் ஸ்ரீமான் சங்கர் பாலசந்திரன், வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ். மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், வட மாகாண பிரதிப் பிரதம செயலாளர்- நிர்வாகம் திருமதி சரஸ்வதி மோகநாதன், பதில் மாகாணப் பணிப்பாளர், தொழிற்துறைத் திணைக்களம் திருமதி வனஐா செல்வரத்தினம் மற்றும் யாழ் றோட்டறிக் கழகத் தலைவர் சு.டீ.பிரசாந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 

இப்  பயிற்சிப்பட்டறையில் உள்ளடக்கப்பட்ட தொழிற்துறைகளாவன.

01.    இயந்திரம் மூலம் சப்பாத்தி தயாரிக்கும் முறை.

02.    இயந்திரம் மூலம் கோழி உரிக்கும் முறை.

03.    இயந்திரம் மூலம் மரவள்ளி கிழங்கு சீவும் முறை.

04.    இயந்திரம் மூலம் வாழைக்காய் சீவும் முறை.

05.    இயந்திரம் மூலம் தேங்காய்ப் பூ திருவும் முறை.

06.    இலகுவில் மரம் ஏறும் முறை.

07.    இயந்திரம் மூலம் வாழை மடலை வாழை நாராக்கும்  முறை.

08.    இயந்திரம் மூலம் மோட்டார் வாகன சுத்திகரிப்பு முறை.

09.    கடதாசிப் பை தயாரிக்கும் முறை.

10.    இயந்திர செக்கு மூலம் எண்ணெய் தயாரிக்கும் முறை.

 

11.    இயந்திரம் மூலம் சிறியளவான தானியங்கள் அரைக்கும் முறை.