செயலாளர்

 திரு.க.தெய்வேந்திரன்

செயலாளர்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு

இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

Tel: +94-21-2217303

Fax: +94-21-2217304

Mobile: 0777811212

Email:

 

 

 

விவசாய அமைச்சு

கிராமியவிரிவாக்கம் மற்றும் சேதனபயிர்ச் செய்கையில் மேலதிக எண்ணக்கருக்கள் தொடர்பான பயிற்சிப் பட்டறை

ளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் 20.02.2019 தொடக்கம் 21.02.2019 வரை தகைநிலைப் பேராசிரியர் திரு.ந.ஸ்ரீPஸ்கந்தராஜா அவர்களினால் கிராமிய விரிவாக்கம் மற்றும் சேதனபயிர்ச் செய்கையில் மேலதிக எண்ணக்கருக்கள் தொடர்பான பயிற்சிப் பட்டறையானது மாகாண விவசாயத் திணைக்களத்தின் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்டது.

மேற்படி பயிற்சிப் பட்டறையானது, மாகாண விவசாயத் திணைக்களத்தைச் சார்ந்த உத்தியோகத்தர்களின் சிந்தனைத் திறனை விரிவுபடுத்திப் பல்வகைப்பட்ட நோக்கு அணுகுமுறைக் கோட்பாடுகளை கிராமிய விரிவாக்க செயற்பாடுகளில் பின்பற்றி சேதன விவசாயம் மற்றும் ஏனைய புதுமையான நடைமுறைகளினை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடாத்தப்பட்டது.

பயிற்சிப் பட்டறையின் முதலாம் நாள் உத்தியோகத்தர்கள் 6 குழுக்களாகப் பிரிந்து இதில் 3 குழுக்கள் 3 சேதன விவசாயிகளின் தோட்டத்தையும் மற்றைய 3 குழுவினரும் 3 அசேதன விவசாயிகளின் தோட்டத்தையும் பார்வையிட்டு விவசாயிகளுடன் பங்குபற்றலுடனான கலந்துரையாடலை மேற்கொண்டு பெற்றுக் கொண்ட கண்டறிதல்களை சிந்தனை வரைபடத் தொழில்நுட்பம் மூலம் ஆவணப்படுத்தினார்கள். பயிற்சிப் பட்டறையின் இரண்டாம் நாள் 6 குழுக்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்கள் தமது கண்டறிதல்கள் மற்றும் பரிந்துரைகளை தாம் தகவல் திரட்டிய விவசாயிகளின் முன்னிலையில் வெளிப்படுத்தி சேகரித்த தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.

2 ஆம் நாள் பயிற்சிப் பட்டறையின்போது மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் கிளிநொச்சி பொ.அற்புதச்சந்திரன், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் முல்லைத்தீவு பூ.உகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். பல்வகைப்பட்ட நோக்கு அணுகுமுறைக் கோட்பாடுகளை கிராமிய விரிவாக்க செயற்பாடுகளில் பின்பற்றி சேதன விவசாயம் மற்றும் ஏனைய புதுமையான நடைமுறைகளினை விவசாயத் துறையில் ஊக்குவிப்பதன் அத்தியாவசியத்தை வலியுறுத்தினர். அத்துடன் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர்கள் தமது ஏனைய உத்தியோகத்தர்களையும் மேற்படிவிடயம் தொடர்பாகப் பயிற்றுவிக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளதாகக் கூறினார்கள்.