சுகாதார அமைச்சு

அராலி வடக்கில் நடமாடும் சித்த வைத்திய சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது

அராலி வடக்கில் நடமாடும் சித்த மருத்துவ சேவையானது கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில், அக்கட்டடத் திறப்பு விழாவான 11 பெப்ரவரி 2019 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வானது திரு.தி.விக்கினஜெயம் (அராலி வடக்கு, கி. அ. சங்க தலைவர்) அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்டதோடு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் யாழ் - கிளிநொச்சி ஈஸ்வரபாதம் சரவணபவன்  அவர்களால் அக்கட்டடமானது வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. 

அத்துடன் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திரு. தர்மலிங்கம் நடனேந்திரன் (தவிசாளர், வலிமேற்கு, பிரதேச சபை, சுழிபுரம்), வைத்திய கலாநிதி.திருமதி. சியாமா துரைரட்ணம் (பணிப்பாளர், மாகாண சுதேச மருத்துவ திணைக்களம், வடமாகாணம்), திருமதி.கி.செந்தூரன் (உதவிப் பிரதேச செயலாளர், வலிமேற்கு சங்கானை) ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக வைத்திய கலாநிதி செல்லத்துரை பரமசிவம்பிள்ளை JP (முன்னாள் தலைவர் கி. அ. ச, கௌரவ உறுப்பினர் வலிமேற்கு, பிரதேசசபை), திரு. சிவகுரு பாலகிருஷணன் (கௌரவ உறுப்பினர், வலிமேற்கு, பிரதேசசபை.), செல்வி. தீபிகா விஜயகுமார் (கௌரவ உறுப்பினர், வலிமேற்கு, பிரதேசசபை.), திருமதி. றஞ்சிதா ரிச்சேட் (கிராம உத்தியோகத்தர், J/164, அராலிவடக்கு), திரு. தனுஸ்கோடி சாந்தலிங்கம் (கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், வலிமேற்கு பிரதேச செயலகம், சங்கானை), திரு. நேசநாதன் பிரதீபன் (அபிவிருத்தி உத்தியோகத்தர், வலிமேற்கு பிரதேச செயலகம், சங்கானை) ஆகியோரும் கலந்துகொண்டனர். 

நடமாடும் மருத்துவ சேவையானது கிழமைக்கு இருதடவைகள் நடைபெற உள்ளது.