பணிப்பாளர் சுகாதார சேவைகள்

jude

வைத்தியக் கலாநிதி.                  ஆ. கேதீஸ்வரன்
பணிப்பாளர் சுகாதார சேவைகள்


சுகாதார சேவைகள் திணைக்களம்.
சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம்.


T.P : 021 222 0811
Mobile : 0776043848
Fax: 0212220818
Email: drakethes64@gmail.com

சுகாதார சேவைகள் திணைக்களம்


பணி நோக்கு

தேசிய மாகாண மட்டங்களில் உருவாக்கப்பட்ட கொள்கைகளையும், உபாயங்களையும், நடைமுறைப்படுத்துவதன் மூலம் வினைத்திறன் மிக்க தரமான சுகாதார சேவைகளை வழங்குதலும் இதன் போது ஏற்படும் சவால்களையும் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளல்.

நோக்கங்கள்

  • மாகாண. மாவட்ட மட்டங்களில் சுகாதார பராமரிப்பு மற்றும் தகவல் முறைமைகளை ஸ்தாபித்தலும் அபிவிருத்தி செய்தலும்.

  • மாகாணத்தில் பூரணத்தவமானதும் உயர்தரமானதுமான சுகாதார சேவையை வழங்குதலை உறுதி செய்தல்.

  • சுகாதார வசதிகளை முன்னுரிமை அடிப்படையில் புனர்நிர்மாணம்இ புனருத்தாரணம் செய்தல்.

  • மாகாண மட்டத்தில் சுகாதார சேவையினை நலிவடைந்த மக்களுக்கும் கிடைக்கக்கூடியதாக செய்தல்.

  • நீண்ட காலம் நிலைத்து நிற்கக்கூடியதான கருத்திட்டங்களையும் நிகழ்ச்சித் திட்டங்களையும் திட்டமிடல்.

  • உயர் உற்பத்தித்திக்கான சிறந்த நிதி முகாமையினையும்; உறுதி செய்தல்.

  • மாகாணத்தில் சுகாதார ஊழியர்களின் தலைமைத்துவத்தை முன்னேற்றல்.

  • சுகாதார துறையின் இலக்கினை தேசியஇ மாகாண மட்டங்களில் அடைவதற்கு எல்லா பங்காளிகளுடனும் ஒத்துழைத்தலும் உதவி செய்தலும்.

பணிக்கடமை.

  • வைத்தியசாலைகள் நிர்மாணம், புனர்நிர்மாணம், தரமுயர்த்துதல், மற்றும் அவற்றிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் பற்றிய தீர்மானங்களை மேற்கொள்ளல்.

  • மாகாண மட்டத்தில் வருமுன் காத்தல் (Prevention) அறிவுறுத்தல்களை வழங்குவதுடன் மேற்பார்வை செய்தல்.

  • ஒவ்வொரு வருடமும் வடமாகாணத்திலுள்ள சுகாதார சேவைகள் திணைக்களங்களிற்கான நிதி ஒதுக்கீட்டினை தேவையின் அடிப்படையில் பிராந்திய மட்டங்களுக்கு பகிர்ந்தளித்தல்.

  • வடமாகாண மக்களிற்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான மேலதிக நிதியினை  அரசசார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையுடன் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை எடுத்தல்.

  • பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைகள் ஊடாக வலுவிழந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கான அடிப்படை சுகாதார வசதிகள் வழங்கப்படுவதை உறுதிசெய்தல்.

  • மாகாணத்தில் திடீர்ரென ஏற்படும் நோய்த்தொற்றுக்களிற்கான தடுப்பு முறைகள் மேற்கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்குதல்.

  • வடமாகாண மக்களிற்கான சுகாதார சேவைகள் வழங்கலின் தரத்தினை மேம்படுத்தலும் உறுதி செய்தலும்.

  • சுகாதார துறை ஊழியர்களின் தரத்தை மேம்படுத்துவதுடன் வினைத்திறமையான முறையில் சேவை புரிவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுத்தல்

  • சுகாதார திணைக்களங்களிலும் வைத்தியசாலைகளிலும் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ளல்