ஆணையாளர்

திரு.பொ.வாகீசன்

ஆணையாளர்
கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம்
முதியோர் இல்ல வளாகம்
கண்டி வீதி, கைதடி

தொ.பே: 0212057063
கை.தொ.பே: 0773868567
மின்னஞ்சல்:ccdnp@mail.com

கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம்

தொலைநோக்கு

வடமாகாணத்திலுள்ள ஐந்துமாவட்டங்களிலும் வாழுகின்ற மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கலாசாரத்தை மேம்படுத்துவதற்கு கூட்டுறவு இயக்கத்தை வளர்த்தலும், அதிகாரமளித்தலும்.

பணிநோக்கு

பொருளாதரா வளத்தை அடித்தளமாகக் கொண்டு கூட்டுறவுக் கொள்கைகளுக்கமைய சமூக, பொருளாதார வளங்களை மக்களிடையே பகிர்ந்தளித்து, சிறந்த கூட்டுறவு சேவைகளை வழங்கி அவர்களை பங்களிக்கச் செய்வதுடன் சிறந்த மனித வளத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குதல்.
 

குறிக்கோள்கள்

கூட்டுறவு இயக்கத்தின் சேவைகளை விரும்பும் மக்களுக்கு மாகாண கூட்டுறவு திணைக்களம் அதற்கான வசதிகளையும், ஆலோசனைகளையும் வழங்குவதுடன் அபிவிருத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கினை வகித்து நிலைத்து இயங்கக்ககூடிய நிறுவனமாக செயற்படுவதுடன், அரசாங்கத்தினதும் மாகாண சபையினதும் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி குறிக்கோளை அடைவது

பிரதான விடயப்பரப்புக்கள்

  • கூட்டுறவின் அடையாளத்தினை உறுதிப்படுத்தியும் கூட்டுறவு இயக்கத்தினை விரிவுபடுத்தியும் கூட்டுறவுச் சங்கங்களினை வலுப்படுத்தல்

  • நிலையான அபிவிருத்திக்குக் கூட்டுறவுப் பகுதியின் பங்களிப்பினை அதிகரிக்கச் செய்தல்

  • தொழில் முறையையும் முகாமைத்துவ நடவடிக்கைகளையும் சந்தைப்படுத்தல் சவால்களுக்கு முகங் கொடுத்து சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அபிவிருத்தித் தந்திரோபாயங்களையும் முதலீடுகளையும் மேற்கொள்ளல்

  • கூட்டுறவுக் கொள்கைகளை மக்கள் பால் எடுத்துச் செல்வதற்கு வேண்டிய உதவிகளையும், வழிவகைகளையும் செய்தல்