chief-secretariat2

கட்டடங்கள் பணிப்பாளா்

எந்திரி எஸ். மோகனதேவன்

மாகாண பணிப்பாளா் - கட்டடங்கள் திணைக்களம்

கடற்கரை வீதி, குருநகர், யாழ்ப்பாணம்

தொ.பே: 021-2220625

கை.தொ.பே:0773868576

தொ.நகல்: 021-2228091

மின்னஞ்சல்: npbuild@sltnet.lk

கட்டடங்கள் திணைக்களம்

பணிக் கூற்று

 வடமாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்களின் கட்டட நிர்மாண, மீள்நிர்மாண,புனர்நிர்மாண மற்றும் பராமரிப்பு தொடர்பான திருப்திகரமான சேவை வழங்கல்.

பிரதான செயற்பாடுகள்

 

  • வடமாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கு தேவையான கட்டட நிர்மாண, மீள்நிர்மாண, புனர்நிர்மாண வேலைகளை கொள்கைத் தீர்மானங்கள், கட்டுப்பாடு மற்றும் தொடர்புபடுத்தலுக்கு அமைய அமுல்படுத்தல்.

 

  • நிர்மாணம் தொடர்பாக தேவைப்படும் அமுலாக்கல், திட்டமிடல், வடிவமைத்தல், மதிப்பிடுதல், நிர்மாணித்தல், பராமரிப்பு மற்றும் ஆலோசனைச் சேவை வழங்கல்.

 

  • அரச நிறுவனங்களின் கட்டட நிர்மாண நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கமைத்தல்.

 

  • நிர்மாணத் துறைக்குத் தேவையான கட்டடப் பொருட்களைப் பாதுகாத்தல்.

 

  • கட்டட நிர்மாணத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஆய்வு செய்யத்தூண்டுதல்.

 

  • கட்டட நிர்மாணத்துடன் தொடர்புடைய மூலப்பொருட்களை பரிசோதனை செய்தலும், வேலைகளின் தரத்தினை உறுதிப்படுத்தலும்.

 

  • தொழில்நுட்பமற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு பொருத்தமான பயிற்சிப்பட்டறைகளை ஒழுங்கமைத்தல்.

 

  • அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள்,தனிநபர் தரவு,அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் இன்னும் பலவற்றிற்கான தரவுத்தளத்தினை அபிவிருத்தி செய்தலும் பராமரித்தலும்.

 

  • கட்டடநிர்மாணம் தொடர்பான வேலைகளை கண்காணித்தலும் கட்டுப்படுத்தலும்.

 

  • ஓப்பந்த முறைமைகள் மற்றும் நடைமுறைகளை அபிவிருத்தி செய்தல்.