செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

யாழ் மாவட்டத்தில் விசேட தேவைக்குட்பட்டோருக்கான முதலாம் கட்ட கொடுப்பனவு வழங்கல்

வடமாகாணத்திலுள்ள விசேடதேவைக்குட்பட்டவர்களுக்கு மலசலகூடம் அமைப்பதற்காக தலா ஒருவருக்கு ரூபா 122,000 வடக்கு மாகாண சுகாதார சுதேசவைத்திய மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் புனர்வாழ்வு அலகினூடாக வழங்கப்படவுள்ளது. இதன் முதலாம் கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன் தலைமையில் கோப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 20 நவம்பர் 2015 அன்று நடைபெற்றது.

Read more...

முல்லைத்தீவு குமுழமுனையில் ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை பிரதேசத்தில் ஆரம்ப சுகாதார நிலையம்  வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களினால் 14 நவம்பர் 2015 அன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

Read more...

மல்லாவி பிரதேச வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு கட்டடத் தொகுதி திறந்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பிரதேச வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளி நோயாளர் பிரிவிற்கான கட்டடத் தொகுதியானது வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களினால் 14 நவம்பர் 2015 அன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

Read more...

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த விசேட தேவைக்குட்பட்டோருக்கான முதலாம் கட்ட கொடுப்பனவு வழங்கல்

வவுனியா மாவட்டத்திற்கு உட்பட்ட விசேடதேவைக்குட்பட்டோருக்கான மலசலகூடம் அமைத்தலுக்கான முதலாம் கட்ட கொடுப்பனவு வழங்கல் நிகழ்வு வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன் தலைமையில் 06.11.2015 அன்று முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற்றது.

Read more...

விசேட தேவைக்குட்ப்பட்டோருக்கான மலசலகூடம் அமைததலுக்கான கொடுப்பனவு வழங்கல்

வட மாகாணத்திலுள்ள விசேட தேவைக்குப்பட்டவர்களுக்கு மலசலகூடம் அமைப்பதற்காக, தலா ஒருவருக்கு ரூபா 122,000 வடக்கு மாகாண சபையின் சுகாதார, சுதேச வைத்திய சமூகசேவைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் புனர்வாழ்வு அலகினூடாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

Read more...