செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது -25 மார்ச் 2015

வடமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் தற்காலிக  ஒப்பந்த மற்றும் அமைய அடிப்படையில் கடமையாற்றி   180 நாட்களை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு 25.03.2015 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் வட மாகாண சுகாதார அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

Read more...

“புற்றுநோயுடன் போராடு” எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு நடைபவனியும் நிகழ்வும் - 24 மார்ச் 2015

உலக சுகாதார புற்றுநோய் தினத்தை மாகாண மட்டத்தில் அனுஸ்டிக்கும் முகமாக 24.03.2015 ம் திகதி காலை 7.30 மணிக்கு விழிப்புணர்வு நடைபவனி “புற்றுநோயுடன் போராடு” எனும் தொனிப் பொருளில் யாழ் நகரில் நடைபெற்றது. யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணையிலிருந்து ஆரம்பித்த நடைபவனி யாழ் போதனா வைத்தியசாலை வீதி, கே.கே.எஸ் வீதி, ஸ்ரான்லி வீதி, யாழ் மத்திய கல்லூரி வீதியூடாக யாழ் வீரசிங்க மண்டபத்தை சென்றடைந்தது தொடர்ந்து யாழ் வீரசிங்க மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றது.

Read more...

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட சுகாதார உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கல் - 21 மார்ச் 2015.

வட மாகாண சபையின் சுகாதார அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களில் 180 நாட்கள் வேலையை பூர்த்தி செய்தவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் 21.03.2015 மு.ப 10.00 மணிக்கு வவுனியா நகர சபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

Read more...

உலக வாய் சுகாதார தின விழிப்புணர்வு நடைபவனியும் நிகழ்வுகளும்- 20 மார்ச் 2015

உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு “புன்னகை வாழ்நாள் முழுவதும்” என்ற தொனிப் பொருளில் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று 20.03.2015 அன்று காலை நடைபெற்றது.

Read more...

சுகாதார உதவியாளர்களுக்கான நிரந்தர நியமன வழங்கல் - 19 மார்ச் 2015

சுகாதார தொண்டர்களாக நீண்டகாலமாக கடமையாற்றியவர்களுக்கு சுகாதார உதவியாளர் தரம் III இற்கு நியமனம் வழங்கும் நிகழ்வு 19.03.2015 அன்று பிற்பகல் 4.00 மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

Read more...