செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம் தொடர்பான கலந்துரையாடல் 19 மார்ச் 2015

வட மாகாணத்தில் ஆரம்பக் கட்டமாக, தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தினை முழு அளவில் நடைமுறைப்படுத்துவதற்காக அனைத்து திணைக்களங்களினதும் பூரண ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்காகவும், முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்காகவும் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்கள் தலைமையில் மாகாண மட்ட நுளம்புக் கட்டுப்பாட்டுக் கூட்டம் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மகாநாட்டு மண்டபத்தில் 19.03.2015 அன்று நடைபெற்றது.

Read more...

மீளிணைக்கப்பட்ட சிறுவர்களின் மீளாய்வு ஒன்று கூடல் நிகழ்வு - 19 மார்ச் 2015

வடமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் மீளிணைக்கப்பட்ட சிறுவர்களின் மீளாய்வு ஒன்றுகூடல் நிகழ்வு 19.03.2015 அன்று கிளிநொச்சியில்; நடைபெற்றது. இதில் சிறுவர்களின் நடன நிகழ்வுகளும் நடைபெற்றன.

Read more...

வவுனியா பிராந்திய நோய் மட்டுப்படுத்தும் பராமரிப்புப் பிரிவு அங்குராப்பணமும் குறுந்திரைப்பட இறுவட்டு வெளியீடும் - 13 பங்குனி 2015

 width=500வவுனியா பிராந்திய நோய் மட்டுப்படுத்தும் (Palliative) பராமரிப்புப் பிரிவினை ஆரம்பித்து வைக்கும் வைபவமானது வவுனியா பொது வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் 13.03.2015 அன்று நடைபெற்றது.

Read more...

சர்வ தேசமகளிர் தினம் - 2015 இற்கான விழிப்புணர்வு நடைபவனியும் நிகழ்வும் - 10 மார்ச் 2015

 width=500வடமாகாண சுகாதார அமைச்சின் மகளிர் விவகார பிரிவின் ஏற்பாட்டில் சர்வதே சமகளிர்தினம் - 2015 நிகழ்வு வவுனியாவில்10.03.2015 ம் திகதி நடைபெற்றது.

Read more...

கீரிமலை ஆயள்வேத மத்திய மருந்தகம் திறப்புவிழா நிகழ்வு - 11 பெப்பிரவரி 2015

கீரிமலை கருகம்பனை கிராமத்தில் ஆயுள்வேத மத்திய மருந்தகம் 11 பெப்பிரவரி 2015 ம் திகதி வடமாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை, நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு, சமூக சேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களால்  திறந்து வைக்கப்பட்டது.

Read more...