முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

மன்னார் முசலி பிரதேச சபையின் நூலக கட்டடம் திறந்து வைக்கப்பட்டது

உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்கள நிதி உதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் ரூபா 6.17 மில்லியன் ரூபா செலவில் 2016ம் ஆண்டு அமைக்கப்பட்ட முசலி பிரதேச சபையின் சிலாவத்துறை நூலக கட்டடம் வடமாகாண சபையின் முதலமைச்சர்  நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 02 மே 2017 அன்று  மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

Read more...

புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது

வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் 2017ம் ஆண்டிற்கான வீடமைப்புத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்ப்பட்ட 14 பயனாளிகளுக்கான முதற்கட்ட கொடுப்பனவாக தலா ரூபா 150,000.00 வழங்கப்பட்டது.

Read more...

புதிய வீடு கட்டுவதற்கான கொடுப்பனவு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது

வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ஒன்பது இலட்சத்து ஐயாயிரம் ரூபா பெறுமதியான புதிய வீடுகளை அமைப்பதற்கான முதலாம் கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு 26 ஏப்ரல் 2017 அன்று அமைச்சின் செயலாளர் திருமதி.வி.கேதீஸ்வரன் தலைமையில் யாழ்ப்பணம், கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அமைச்சில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் பயனாளிகளுக்கான கொடுப்பனவு வழங்கப்பட்டது. 

Read more...

வடமாகாண முதலமைச்சர் அவர்களின் புதுவருட வாழ்த்துச் செய்தி

எமக்கு பல நன்மைகளை பெற்றுத்தந்த துர்முகி வருடத்தை அன்புடன் வழிஅனுப்பி புதிதாக பிறக்கவிருக்கும் ஏவிளம்பி வருடத்தை மகிழ்வுடன் வரவேற்கும் இச் சந்தர்ப்பத்தில் எமது மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தி ஒன்றை வழங்குவதில் மகிழ்வடைகின்றேன். 

Read more...

சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்பட்டன

வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தின் கீழ் காணப்பட்ட சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III இற்கான 7 வெற்றிடங்களை நிரப்புவதற்காக வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் கடந்த 2016.11.27ம் திகதி நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சை மற்றும் அதன் பின்னர் நடைபெற்ற நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்கள் 2017.03.22ம் திகதி வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டன.

Read more...

அலுவலர்களின் தொழில்சார் பிரச்சினைகளை ஆராய்வதற்கான ஊழியர் தினம்

வடமாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் கடமையாற்றும் அலுவலர்களின் தொழல்சார் பிரச்சினைகளை ஆராய்வதற்கான ஊழியர் தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Read more...