முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

முதலமைச்சரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

 

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

2017ம் ஆண்டானது இந்நாட்டிற்கு குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கு முக்கியமான ஆண்டாக அமையும்.  இந்த ஆண்டானது எங்கள் மக்கள் மத்தியில் கடந்த காலங்களை விட ஐக்கியத்தை உருவாக்க வேண்டும்.  எந்த பிளவுபடுத்துகின்ற போக்குகளும் எம்மைப் பாதிக்கலாம். எல்லோரும் ஒற்றுமையுடன் வருகின்ற ஆண்டை வரவேற்போம். வருகின்ற மாதங்களில் எல்லோரும் ஒற்றுமையாக வாழுகின்ற உணர்வை உருவாக்குவோம். புதுவருடத்தில் அரசியல், சமூக மற்றும் பொருளாதாரத்தில் சிறப்பான மாற்றங்கள் அமைய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. யாவரும் இவ்வருடம் சுகத்துடனும், சுபீட்சத்துடனும், மனத்திருப்தியுடனும் வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

 

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்,

முதலமைச்சர்,

வட மாகாண சபை.

முதலமைச்சர் அவர்களால் புதிய வீடு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது

வட மாகாண முதலமைச்சரின் அமைச்சின் 2016ம் ஆண்டிற்கான வீடமைப்புத் திட்ட நிதியில் யாழ்ப்பாணம் கைதடி மத்தியில் புதிதாக கட்டப்பட்ட வீடு முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் இன்று 14.12.2016ம் திகதி சுபவேளையில் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. 

Read more...

வருமான பரிசோதகர், ஆய்வு உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன

முதலமைச்சரின் அமைச்சின் கீழ் வருகின்ற திணைக்களங்கள் சிலவற்றில் காணப்பட்ட சில பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற நேர்முகத் தேர்வு என்பவற்றுக்கு ஏற்ப தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 12 டிசெம்பர் 2016 அன்று முதலமைச்சரின் அமைச்சில் நடைபெற்றது.

Read more...

பெண்களைத் தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன

வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் முதலமைச்சரின் அமைச்சின் கீழ் வருகின்ற மகளிர் விவகார பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் முதற்கட்ட நிகழ்வு முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் திருமதி.வி.கேதீஸ்வரன் தலைமையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை மண்டபத்தில் 10.11.2016ம் திகதி நடைபெற்றது.

Read more...

மாகாண கைத்தொழில் கண்காட்சி – 2016

வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தால் மாகாண கைத்தொழில் கண்காட்சியானது கைத்தறி நெசவு, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவு பதனிடல் போன்றவற்றில் ஈடுபடும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வருகின்றது.  இவ்வருடம் இக்கண்காட்சியானது 08 செப்டெம்பர் 2016 முதல் 10 செப்டெம்பர் 2016 வரை வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. 

Read more...