முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

முதலமைச்சரின் 2017ம் ஆண்டிற்குரிய பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் கீழ் உதவி வழங்கல்

முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் குறைந்த வருமானம் பெறும் ஒரு தொகுதி மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் முதலமைச்சரின் 2017ம் ஆண்டிற்குரிய பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து ரூபா.4,304,500.00 பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வானது 08 நவம்பர் 2017 அன்று கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சில் இடம்பெற்றது.

Read more...

முதலமைச்சரின் அமைச்சின் வீடமைப்புத் திட்ட உதவித்தொகை வழங்கும் நிகழ்வு

 width=500முதலமைச்சரின் அமைச்சின் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 15 பயனாளிகளுள் 14 பேருக்கு வீடமைப்புத் திட்ட உதவித்தொகையின் முதற்கட்ட கொடுப்பனவாக தலா ரூபா 150,000.00,  04 ஒக்ரோபர் 2017 அன்று அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டது. 

Read more...

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு முதலமைச்சரின் அமைச்சினால் கருத்தரங்கும் கலாச்சார நடைபவனியும் நடாத்தப்பட்டது.

 width=500சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடந்த 25.09.2017ம் திகதி வடக்கின் பண்பாடு, கலாசாரம் சார்ந்த சுற்றுலாத் துறை அபிவிருத்திக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காலை நடைபெற்ற கலாச்நசார நடைபவனியை வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தின் முன்றலில் ஆரம்பித்து வைத்தார். இந்நடைபவனியில் வடக்கின் பண்பாடுகள், கலாசாரங்கள் மற்றும் பாரம்பரியங்களை பறைசாற்றுகின்ற வகையிலான கலைகள், இசைகருவிகள், பழமை வாய்ந்த வாகனங்கள் என்பவற்றுடன் சுற்றுலா துறைசார்ந்த நிறுவனங்கள், ஹோட்டல்கள், அரச அலுவலகங்களின் உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள், விரிவுரையாளர்கள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Read more...

கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் பயிற்சித் தரத்திற்கான நியமனங்கள் வழங்கப்பட்டன

வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கீழ் காணப்படுகின்ற கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் பயிற்சித் தரத்திற்காக மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் அதன்பின்னர் நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சை என்பவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 56 பேருக்கான நியமன கடிதம் 26 யூலை 2017 அன்று கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள பிராந்திய கால்நடை அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டது.

Read more...

முதலமைச்சர் அமைச்சின் கீழ் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன

முதலமைச்சரின் அமைச்சின் கீழ் உள்ள காணி ஆணையாளர் திணைக்களத்தில் காணப்பட்ட 07 காணி வெளிக்களப் போதனாசிரியர் வெற்றிடம், உள்ளுராட்சித் திணைக்களத்தின் கீழ் காணப்பட்ட 01 சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் வெற்றிடம், 06 வருமானப் பரிசோதகர் (மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலானது) வெற்றிடம், 01 ஆய்வு உத்தியோகத்தர் (மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலானது) வெற்றிடம் என்பவற்றிற்கான நியமனங்கள் 12 யூலை 2017 அன்று வழங்கப்பட்டன.

Read more...

மன்னார் நகரசபையின் அலுவலகக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது

உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்கள நிதி உதவியுடன் மற்றும் வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் நிதி பங்களிப்புடன் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் ரூபா 35.0 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட மன்னார் நகரசபையின் அலுவலக கட்டடம்; வடமாகாண முதலமைச்சர் அவர்களின் சார்பில் கலந்துகொண்ட வடமாகாண சபையின் கல்வி அமைச்சர் கலாநிதி.கந்தையா சர்வேஸ்வரன் அவர்களால் 04 யூலை 2017 அன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

Read more...