chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

அணை பாதுகாப்பு மற்றும் நீர் வள திட்டமிடல் திட்டம் (DSWRPP) தொடர்பான கலந்துரையாடல் - 05 மே 2014

அணை பாதுகாப்பு மற்றும் நீர் வள திட்டமிடல் திட்டம் (DSWRPP)தொடர்பான கலந்துரையாடல் பிரதம செயலாளர் செயலகத்தில் 5 மே 2014 அன்று நடைபெற்றது.

Read more...

புதிதாக சேவைக்கு அமர்த்தப்பட்ட கணக்காளர்களுக்கான அறிமுகப்பயிற்சி நிகழ்வு - 16 ஏப்ரல் 2014

நிதி திட்டமிடல் அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி நிறுவனத்தினால், இலங்கை கணக்காளர்கள் சேவைக்கு புதிதாக நியமனம் பெற்ற கணக்காளர்களுக்கான நான்கு நாள் அறிமுகப்பயிற்சி  16 ஏப்ரல் 2014 தொடக்கம் 22 ஏப்ரல் 2014 வரை மாகாணக் கல்வி அமைச்சின் ஆங்கில வள நிலையத்தின் கேட்போர் கூடத்தில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

Read more...

யுனிசெவ் நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் - 02 ஏப்ரல் 2014

 யுனிசெவ் நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் 02 ஏப்ரல் 2014 அன்று பிரதம செயலாளர் செயலகத்தில் இடம்பெற்றது. யுனிசெவ் நிகழ்ச்சித் திட்டத்தின் வடமாகாணத்திற்கான பிரதம ஒருங்கிணைப்பாளர் திரு. பிரகாஸ் மற்றும் அத்திட்டத்தின் அலுவலர்களினால் 2013ம் ஆண்டிற்கான நிகழ்ச்சிகளின் முன்னேற்ற அறிக்கையும் 2014ம் ஆண்டிற்கான திட்டங்கள் பற்றியும் தெரிவிக்கப்பட்டது.

Read more...

வடமாகாண சபையின் 2015ம் நிதியாண்டிற்கான நிதித் தேவைப்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் - 21 மார்ச் 2014

வடமாகாண சபையின் 2015ம் நிதியாண்டிற்கான நிதித் தேவைப்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் 21 மார்ச் 2014 அன்று யாழ் பொது நூலகத்தின் வட மாகாணசபையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் மற்றும் கணக்காளர்கள் ஆகியோருக்கு 2015ம் நிதியாண்டிற்கான நிதித் தேவைப்பாடுகள் தொடர்பான மதிப்பீடு தயாரிப்பது தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

Read more...

மாகாணத் திட்டமிடல் குழு கூட்டம் – 13 மாச் 2014

வட மாகாண திட்டமிடல் குழுக் கூட்டம் 14 மாச் 2014 அன்று யாழ் பொது நூலகத்தில் அமைந்துள்ள வட மாகாண மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

Read more...

முதலாவது செயலாளர் குழுக்கூட்டம் - 12 மார்ச் 2014

வடமாகாண அமைச்சுக்களினதும் திணைக்களங்களினதும் நிதி, நிர்வாக மற்றும் துறைரீதியான அபிவிருத்தி செயற்றிட்ட முன்னேற்றங்கள் தொடர்பிலான மீளாய்வு மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்த இவ்வாண்டுக்கான முதலாவது செயலாளர் குழுக்கூட்டம் பிரதம செயலாளர் திருமதி.ர.விஜயலட்சுமி அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர்காரி யாலயத்தில் 2014 மார்ச் 12ந் திகதி நடைபெற்றது.

Read more...