chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

வட மாகாண நிதி முகாமைத்துவ செயல்திறன் விருது வழங்கும் விழா மற்றும் மதிப்பீட்டு அறிக்கை வழங்கல் - 2017

வட மாகாணத்தின் நிதி மற்றும் நிதி முகாமைத்துவத்தை வலுப்படுத்தும் பொருட்டு, மாகாண திறைசேரியின் பொதுநிதி கட்டப்பாட்டு அலகு, பிரதம செயலாளர் செயலகம் வட மாகாணம் இனால் முதல் தடவையாக வட மாகாண அரச நிறுவனங்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் 'நிதி முகாமைத்துவ செயல்திறன்' இற்கான விருது வழங்கும் நிகழ்வானது 30 ஆகஸ்ட் 2018 ஆம் திகதி அன்று  சரஸ்வதி ஹால், யாழ்ப்பாணம் இல் நடைபெற்றது.

Read more...

வவுனியா மாவட்டத்தில் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாலங்கள் மக்கள் பாவனைக்கென கையளிக்கப்பட்டன

வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் மாமடுவ மாறாஇலுப்பை வீதியில் அமைக்கப்பட்ட இரண்டு பாலங்கள் வடக்கு மாகாண சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினரான அ.ஜெயதிலக அவர்களால் 18 ஆகஸ்ட் 2018 அன்று வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டன.

Read more...

வடக்குமாகாண பொது முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு தெரிவானோருக்கான நியமனக்கடிதம் வழங்கப்பட்டது

வடக்குமாகாண பொது முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் III இற்கான110 வெற்றிடங்களை நிரப்புவதற்காக தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரிகளிற்கு நியமனக் கடிதம் வழங்கல் நிகழ்வு 2018.08.17ம் திகதி அன்று வடக்குமாகாண பேரவைச் செயலகத்தின் மாநாட்டுமண்டபத்தில் இடம்பெற்றது. 

Read more...

கிளிநொச்சி மாவட்டத்தில் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாலங்கள் மக்கள் பாவனைக்கென கையளிக்கப்பட்டன

வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல்நகர், கனகாம்பிகைக்குளம், திருநகர், ஜெயந்திநகர், கண்டாவளை புன்னைநீராவி, கல்லாறு பிரதேசங்களில் அமைக்கப்பட்ட 12 பாலங்கள் கரைச்சிப்பிரதேச உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் வடக்கு மாகாண சபையின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர்களான த.குருகுலராசா மற்றும் சு.பசுபதிப்பிள்ளை அவர்களால் 27 யூலை 2018 அன்று வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டன. 

Read more...

கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட பாலம் மக்கள் பாவனைக்கென கையளிக்கப்பட்டது

வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட பச்சைப்புல்மோட்டை வீதிப்பாலம் கரைதுரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் ஆ.புவனேஸ்வரன் ஆகியோரால் 12 யூலை 2018 அன்று வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

Read more...

கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் மண்டைதீவில் அமைக்கப்பட்ட பாலமானது மக்கள் பாவனைக்கென கையளிக்கப்பட்டது

வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மண்டைதீவு அல்லைப்பிட்டி இணைப்பு வீதிப்பாலமானது வடக்கு மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் வேலணை பிரதேசசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 20 யூன் 2018 அன்று வைபவரீதியாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

Read more...