Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
பிரதம செயலாளர் செயலகம்

chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

வட மாகாண சபையின் செயல்திட்டத்தினை வலுப்படுத்தல் திட்டத்தின் கீழ் திட்டமிடல் மற்றும் உத்தி தொடர்பன அமர்வு

வட மாகாண சபையின் செயல்திட்டத்தினை வலுப்படுத்தல் திட்டத்தின் கீழ் திட்டமிடல் மற்றும் உத்தி தொடர்பன அமர்வு ஒன்றை வட மாகாண பிரதம செயலாளர் செயலகம் ஆசிய மன்றத்தின் ஒத்துழைப்புடனும் அவுஸ்ரேலிய அரசின் வெளிவிவகாரத் திணைக்களத்தின் நிதி அனுசரனையுடனும் எற்பாடு செய்திருந்தது. யாழ்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் 30 யூலை 2015 நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் கலந்துகொண்டார். 

Read more...

மாகாணத் திட்டமிடல் குழுக் கூட்டம் நடைபெற்றது

இரண்டாவது காலாண்டிற்கான வட மாகாண திட்டமிடல் குழுக் கூட்டம் மற்றும் மாகாண செயற்திட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 03 ஆகஸ்ட் 2015 அன்று யாழ் பொது நூலகத்தில் அமைந்துள்ள வட மாகாண மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

Read more...

உலக உணவுத் திட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

உலக உணவுத் திட்டத்தின் திட்டப்பணிப்பாளர் இஸ்மாயில் ஒமர் மற்றும் அவரது குழுவினர் பிரதம செயலாளர் அ.பத்திநாதன் அவர்களை 29 யூலை 2015 அன்று பிரதம செயலாளர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

Read more...

இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டத்திற்கான இடைநிலை ஆய்வுக்குழுவினர் வட மாகாணத்திற்கு விஜயம்

விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் (IFAD) இடைநிலை ஆய்வுக்குழுவினர்  இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு செய்ய 26 யூலை தொடக்கம் 12 ஆகஸ்ட் 2015  வரையான காலப்பகுதியில்  வட மாகாணத்திற்கு   விஜயம் செய்துள்ளனர்.

Read more...

வடக்கு மாகாண சபைக்கும் 'யென்' நிறுவனத்திற்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது

யப்பான் நாட்டின் அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்றான 'யென்' நிறுவனத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் சைடில் கப்பாய் அவர்களுக்கும் பிரதம செயலாளர் அ.பத்திநாதன் அவர்களுக்குமிடையில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிற்கு மீள்வருகை தந்தோருக்கான வாழ்வாதார மற்றும் சமூக வலுவூட்டலிற்கான செயற்திட்டத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையானது 29 யூலை 2015 அன்று யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்பட்டது. 

Read more...

கொரிய நாட்டுப் பிரதிநிதிகள் பிரதம செயலாளரை சந்தித்தனர்

கொரிய நாட்டின் ஜெயூ தீவில் தலைமையகத்தினைக் கொண்டு இயங்கும் குளோபல் இன்னர் பீஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் வட மாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்களை அவரது அலுவலகத்தில் 27-07-2015 அன்று சந்தித்துக் கலந்துரையாடினர்.

Read more...