chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

இரண்டாம் காலாண்டிற்கான செயலாளர் குழுக்கூட்டம் - 11 யூன் 2014

வடமாகாண அமைச்சுக்களினதும் திணைக்களங்களினதும் நிதி, நிர்வாக மற்றும் துறைசார் அபிவிருத்தி செயற்திட்ட முன்னேற்றங்கள் தொடர்பிலான மீளாய்வு மற்றும் இவ்வாண்டிற்கான அனுமதிக்கப்பட்ட செயற்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு குறித்த, இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டிற்கான செயலாளர் குழுக்கூட்டம் பிரதம செயலாளர் திருமதி.ர.விஜயலட்சுமி அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் செயலகத்தில் 2014 யூன் 11ந் திகதி நடைபெற்றது.

Read more...

இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டத்திற்கான (IIDP) மேற்பார்வை மற்றும் அமுலாக்கல் ஆதரவு குழுவினர் வட மாகாணத்திற்கு விஜயம் - 28 மே 2014

இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டத்தின் விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் (IFAD) இரண்டாவது மேற்பார்வை மற்றும் அமுலாக்கல் ஆதரவு குழுவினர் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு செய்ய 26 மே 2014 தொடக்கம் 30 மே 2014 வரையான காலப்பகுதியில்  வட மாகாணத்திற்கு   விஜயம் செய்திருந்தனர்.

Read more...

மாகாண உள்ளக கணக்காய்வு அலுவலர்களுக்கான கலந்துரையாடல் - 27 மே 2014

உள்ளக கணக்காய்வு அலுவலர்களுக்கான மாதாந்த கலந்துரையாடல் பிரதம செயலாளர் செயலகத்தில்  27 மே 2014 அன்று நடைபெற்றது. பிரதம செயலாளர் திருமதி.ர.விஜயலட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பிரதம உள்ளக கணக்காய்வாளர் என்.இராசநாயகம் மற்றும் உள்ளக கணக்காய்வு அலுவலர்கள் பங்குபற்றியிருந்தனர்.

Read more...

'யுனிசெப்' திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் - 21 மே 2014

வட மாகாணத்தில் 'யுனிசெப்' நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் பிரதம செயலாளர் திருமதி.ர.விஜயலட்சுமி அவர்கள் தலைமையில் பிரதம செயலாளர் செயலகத்தில் 21 மே 2014 அன்று நடைபெற்றது.

Read more...

அமெரிக்க பசுபிக் கட்டளை தளத்தின் சிரேஸ்ட திட்ட முகாமையாளர் யாழ்ப்பாணம் விஜயம் - 7 மே 2014

அமெரிக்க பசுபிக் கட்டளை தளத்தின்(PACOM) சிரேஸ்ட  திட்ட  முகாமையாளர் மைக் மேக்மில்லன் மற்றும் சிரேஸ்ட பொறியியலாளர் ஆகியோர் வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

Read more...

ஆசிய அபிவிருத்தி வங்கி பணிக் குழுவினர் யாழ்ப்பாணம் விஜயம் - 06 மே 2014

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) சமூகம் சார்ந்த கிராமிய குடிநீர் வழங்கல் மற்றும் துப்புரவு கருத்திட்டத்திற்கான (CBRWSSP)  மீளாய்வுக் குழுவினர்   கருத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக மீளாய்வு செய்வதற்காக 5 மே 2014 தொடக்கம் 9 மே 2014 வரை வடமாகாணத்திற்கான  விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

Read more...