செயலாளர்

திரு.சி.சத்தியசீலன்
கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்

கல்வி அமைச்சு அலுவலகம்,
செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை

 

தொ.இல: 021-221 9259

தொ.நகல்: 021-222 0794 கைபேசி: 0774933994

மின்னஞ்சல்:

sathiyaseelan1964@gmail.com

பணிக்கூற்று

கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறைசார் செயற்பாடுகளில் ஓருங்கிணைப்பினையும் வழிகாட்டலையும் உறுதிப்படுத்தும் கொள்கைகளை உருவாக்குதலும், தனியாள் விருத்தி கட்டியெழுப்பப்படுவதை உறுதிப்படுத்தலும், வடமாகாணத்தில் சமநிலை ஆளுமையுள்ள சமுதாயத்தை தோற்றுவித்தல்.

செய்திகளும் நிகழ்வுகளும்

கல்வி அமைச்சு

மு/கற்சிலைமடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது

புனரமைக்கப்பட்ட முல்லைத்தீவு கற்சிலைமடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் திறப்புவிழா பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. இலங்கை மற்றும் மாலைதீவிற்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடி கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

Read more...

வடமராட்சி மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப்பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டி

வடமராட்சி மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப்பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டி 01 பெப்பிரவரி 2014 அன்று பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

Read more...

2014ம் ஆண்டிற்கான கலாச்சார செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் - 31 ஜனவரி 2014

2014ம் ஆண்டு வட மாகாணத்தில், கலாசாரத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டிய கலாச்சார செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.சி.சத்தியசீலன் தலைமையில் கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் 31 ஜனவரி 2014 அன்று இடம்பெற்றது.

Read more...

2013ம் ஆண்டு க.பொ.த (உயர்தர) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டனர் - 31 ஜனவரி 2014

2013ம் ஆண்டு நமைபெற்ற க.பொ.த (உயர்தர) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.சி.சத்தியசீலன் தலைமையில் யாழ் கல்வி வலய முகாமைத்துவ மண்டபத்தில் 31 ஜனவரி 2014 அன்று இடம்பெற்றது.

Read more...

கல்வி அமைச்சில் புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வு - 01 ஜனவரி 2014

alt

 

கல்வி, கலாச்சார, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வு அமைச்சின் செயலகத்தில் நடைபெற்றது. அமைச்சின் செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. யாழ் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களினால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து கல்வி, கலாச்சார, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சிலும் யாழ் வலயக் கல்வி அலுவலகத்திலும் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் அனைவரும் தேசியக்கொடியின் கீழ் புதுவருடத்திற்கான சத்தியப்பிரமாணத்தினை மேற்கொண்டார்கள்.

Read more...

வட மாகாண விளையாட்டுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடல் – 23 ஒக்ரோபர் 2013

வட மாகாண சபையின் கல்வி கலாச்சார விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா அவர்கள் விளையாட்டுத்துறை அதிகாரிகளுடன் கல்வி அமைச்சின் கேட்போர்கூடத்தில்  23  ஒக்ரோபர் 2013 அன்று கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். 

Read more...