செயலாளர்

திரு.சி.சத்தியசீலன்
கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்

கல்வி அமைச்சு அலுவலகம்,
செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை

 

தொ.இல: 021-221 9259

தொ.நகல்: 021-222 0794 கைபேசி: 0774933994

மின்னஞ்சல்:

sathiyaseelan1964@gmail.com

பணிக்கூற்று

கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறைசார் செயற்பாடுகளில் ஓருங்கிணைப்பினையும் வழிகாட்டலையும் உறுதிப்படுத்தும் கொள்கைகளை உருவாக்குதலும், தனியாள் விருத்தி கட்டியெழுப்பப்படுவதை உறுதிப்படுத்தலும், வடமாகாணத்தில் சமநிலை ஆளுமையுள்ள சமுதாயத்தை தோற்றுவித்தல்.

செய்திகளும் நிகழ்வுகளும்

கல்வி அமைச்சு

வட மாகாண கல்வி மீளாய்வு மாநாடும் செயற்குழுக் கூட்டமும் நடைபெற்றது – 22 ஒக்ரோபர் 2013

வட மாகாண கல்வி மீளாய்வு மாநாடும் செயற்குழுக்  கூட்டமும் வட மாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா தலைமையில் கல்வி அமைச்சின் கேட்போர்கூடத்தில்  22  ஒக்ரோபர் 2013 அன்று நடைபெற்றது.

Read more...

யுனிசெவ், அவுஸ் எயிட் நிறுவன பிரதிநிதிகளுடன் கல்வி அமைச்சர் சந்திப்பு – 14 ஒக்ரோபர் 2013

யுனிசெவ், அவுஸ் எயிட் நிறுவன பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்  கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டு, இளைஞர் விவகாரம் அமைசர் தம்பிராசா குருகுலராஜா தலைமையில் வட மாகாண கல்வி அமைச்சில் 14 ஒக்ரோபர் 2013 அன்று இடம்பெற்றது.

Read more...

வட மாகாண கல்வி அமைச்சர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் – 14 ஒக்ரோபர் 2013

வட மாகாண கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தனது கடமைகளை யாழ்ப்பாணம் செம்மணி வீதியிலுள்ள தனது அலுவலகத்தில் 14 ஒக்ரோபர் 2013 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்வி அமைச்சின் செயலாளர் திரு.சி.சத்தியசீலன் மற்றும் உயர் அதிகாரிகளால் அமைச்சர் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. அடுத்து கடமைகளை பொறுப்பேற்கும் ஆவணத்தில் அமைச்சர் கையொப்பமிட்டார்.

Read more...

நல்லூரில் “தெய்வீக சுக அனுபவம்-2” கர்நாடக இசை நிகழ்ச்சி – 05 செப்ரெம்பர் 2013

யாழ்ப்பாணம் சங்கிலியன் தோப்பில் இடம்பெற்றுவரும் “தெய்வீக சுக அனுபவம்” என்ற தொனிப்பொருளில் அமைந்த இசை நிகழ்வில்  ஸ்ரீமதி சுதா ரகுநாதனின்  இசை நிகழ்வு 05 செப்ரெம்பர் 2013 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி  பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். 

Read more...

2013 ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியப் பெருவிழா முல்லைத்தீவில் நடைபெற்றது – 02 செப்ரெம்பர் 2013

2013 ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியப் பெருவிழா முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் 01, 02 செப்ரெம்பர் 2013 திகதிகளில்  நடைபெற்றது. வட மாகாண கலாச்சார திணைக்களம் இவ்விழாவினை ஒழுங்குசெய்திருந்தது. முதல் நாள் தமிழ் ஆய்வரங்கு இடம்பெற்றது.

Read more...

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் வட மாகாணம் 22 பதக்கங்களுடன் 93 புள்ளிகளைப் பெற்றது - 2011

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி தியகம மகிந்த ராஜபக்ச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

Read more...