செயலாளர்

 திரு.க.தெய்வேந்திரன்

செயலாளர்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு

இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

Tel: +94-21-2217303

Fax: +94-21-2217304

Mobile: 0777811212

Email:

 

 

 

விவசாய அமைச்சு

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சரினால் விளையாட்டுக் கழகத்திற்கு மின்விளக்குகள் வழங்கப்பட்டன

வடமாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் கிராமத்தின் விளையாட்டு வீரர்களும் கழகமும் வளர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு தனது 2017 ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை (CBG) நிதியிலிருந்து ரூ. 30,000 நிதியை ஒதுக்கி குறித்த கழகத்திற்கு தேவையான வலுக்கூடிய மின்விளக்குகள் ஐந்தினைக் கொள்வனவு செய்து குறித்த கழகத்தின் தலைவர் பி.நிலாளனிடம் கையளிக்கும் நிகழ்வு 24 யூலை 2017 அன்று மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் இடம்பெற்றது.

Read more...

இருமருதங்குளம் - சமளன்குளம் வீதிப் புனரமைப்பு பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் 2017ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து (PSDG) வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் அவர்களால் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட 5 மில்லியன் ரூபாவில் வவுனியாவில் இருமருதங்குளம் - சமளன்குளம் வீதிப் புனரமைப்பு பணிகள் 18 யூலை 2017 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Read more...

புதூர் - பாலமோட்டை வீதிப் புனரமைப்பு பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட மாகாண  அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து (PSDG) வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தகவாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களால் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட 5 மில்லியன் ரூபாவில் வவுனியாவின் புதூர் - பாலமோட்டை வீதிப் புனரமைப்பு பணிகள் 18 யூலை 2017 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Read more...

வன்னேரிகுளம் நன்னீர் மீனவ கூட்டுறவு சங்கத்தினரின் மேம்பாட்டிற்காக பலநோக்கு மண்டபம் அமைக்கப்பட்டது

வன்னேரிக்குளம் மீனவ சங்கத்தினரின் மேம்பாட்டிற்காக ரூபா.2.84 மில்லியன் பெறுமதியில் அடிப்படை வசதிகளுடன் கூடிய பல நோக்குக் கட்டடம் வடமாகாண மீன்பிடி அமைச்சின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு பயனாளிகளிடம் 04 யூலை 2017 அன்று வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது. 

Read more...

உப உணவு உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது

உளவனூர் கிராம மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரின் மேம்பாட்டிற்காக உப உணவு உற்பத்தி நிலையம் ரூபா 5 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டு வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களினால்  சங்கத்தினரிடம் வைபவ ரீதியாக 04 யூலை 2017 அன்று கையளிக்கப்பட்டது.

Read more...

கிராமிய விளையாட்டு விழா நிகழ்விற்கான பரிசில்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன

பெரிய பண்டி விரிச்சான், வள்ளுவர் சனசமூக நிலையத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமிய விளையாட்டு விழா நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களினால் வழங்கப்பட்டது. இப்பரிசில்கள் 2017ம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

Read more...