செயலாளர்

 திரு.க.தெய்வேந்திரன்

செயலாளர்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு

இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

Tel: +94-21-2217303

Fax: +94-21-2217304

Mobile: 0777811212

Email:

 

 

 

விவசாய அமைச்சு

மீனவர்களது பிரச்சனை தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது

மன்னார் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மீன்பிடியாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்கள் 11 நவம்பர் 2016 அன்று தாழ்வுபாடு பங்குத்தந்தை தலைமையில் பங்குப்பணிமனையில் இடம்பெற்றது. அத்துடன் மன்னார் பனங்கட்டுக்கொட்டு மீனவர்கள் தமது பிரச்சனைகள் தொடர்பாக வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களோடு  மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

குறித்த தாழ்வுப்பாட்டில் இடம்பெற்ற சந்திப்பில் மன்னார் மாவட்ட மீன்பிடி திணைக்கள உதவிப்பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மீனவர்களது வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் அவர்களது பிரச்சனைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் கிராம முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் நோக்கோடு கூட்டுறவுச் சங்கத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது

மீள்குடியேற்றத்தின் பின் காணப்பட்ட குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்கும் நோக்கில் வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களால் 2016 ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடை (CBG) நிதியிலிருந்து மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட திருக்கேதீஸ்வரம் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் இயங்கி வரும் இலுப்பைக் கடவை கூட்டுறவுச் சங்கத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

Read more...

மீன்பிடி அமைச்சின் மன்னார் மாவட்ட அபிவிருத்தித் திட்டக் கலந்துரையாடல் இடம்பெற்றது

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தலைமையில் 27 மே 2016 அன்று மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் அபிவிருத்தித் திட்டக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

Read more...

வடக்கு மாகாண ஆளுநருக்கும் வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சருக்குமிடையிலான விசேட சந்திப்பு

மன்னார் மாவட்டத்திற்கு 23 மே 2015 அன்று வருகைதந்த வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூறே அவர்கள் வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களை மன்னாரில் உள்ள அவரது உப அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

Read more...

மடு மாந்தை மேற்கு உதைபந்தாட்ட ஒன்றியத்திற்கு (லீக்) உதைபந்தாட்ட பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டன

மன்னார் மாவட்ட மடு மாந்தை மேற்கு உதைபந்தாட்ட ஒன்றியத்தின் (லீக்) வேண்டுகோளுக்கு இணங்க வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களால் உதைபந்தாட்ட பயிற்சிக்காக ரூபா 50,000 பெறுமதியான பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு 21 மே 2016 அன்று காத்தான்குளத்தில் இடம்பெற்றது.

Read more...

பாடசாலை வளர்ச்சிக்கு வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரினால் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன

வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சினால் மன்/தலைமன்னார் துறை றோ.க.த.க பாடசாலையின் வளர்ச்சிக்காக உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 12 மே 2016 அன்று பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் ஆரம்பமானது.

Read more...