செயலாளர்

 திரு.க.தெய்வேந்திரன்

செயலாளர்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு

இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

Tel: +94-21-2217303

Fax: +94-21-2217304

Mobile: 0777811212

Email:

 

 

 

விவசாய அமைச்சு

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் புனர்வாழ்வு பெற்ற போராளியை நேரில் சென்று பார்வையிட்டார்

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களின் திட்டத்தின் கீழ் இடம்பெற்ற அரசியல் கைதிகளின் குடும்பங்கள், புனர்வாழ்வு பெற்ற போராளிகள், யுத்தத்தில் பிள்ளைகளை பலி கொடுத்த முன்னாள் போராளிகளின் குடும்பங்கள் ஆகியோருக்கான வாழ்வாதார திட்டம் வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் பயன் பெற்ற புதுக்குடியிருப்பு சுதந்திரபுரத்தை சேர்ந்த புனர்வாழ்வு பெற்ற படுக்கையில் இருக்கும் பயனாளியான திரு.சிவராசா சாந்தராசா என்பவரை 19 டிசெம்பர் 2015 அன்று அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். 

Read more...

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சுதந்திரபுரம், வள்ளிபுரம் மற்றும் கைவேலி  ஆகிய கிராமங்களை சேர்ந்த மிகவும் வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்களின் தேவை கருதி அவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்குவதற்கான நிகழ்வு பெரண்டினா தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் 19 மற்றும் 20 டிசெம்பர் 2015 ஆகிய இருதினங்களும் நடாத்தப்பட்டது.

Read more...

வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சரால் வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கப்பட்டது

வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டில் இருந்து மன்னார் மாவட்டத்தை சேர்ந்த நலிவுற்ற குடும்பங்களுக்கான விசேட வாழ்வாதார உதவித்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் மற்றும் துவிச்சக்கரவண்டிகள் என்பன கடந்த வாரம் மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் வைத்து அமைச்சரால் வழங்கப்பட்டது.

Read more...

முள்ளியவளை - குமுளமுனை வீதியினை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்

முல்லைத்தீவு மாவட்ட முள்ளிவளையில் இருந்து குமுளமுனை வரை செல்லும் 13 கிலோமீற்றர் வீதியை புனரமைக்குமாறு அங்குள்ள மக்கள் கொடுத்த விண்ணப்பத்திற்கமைவாக 19 டிசெம்பர் 2015 அன்று முள்ளியவளைக்கு நேரில் விஜயம் செய்த வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்கள் மேற்படி வீதியின் தற்போதைய நிலையை அவ்வீதி வழியாக சென்று பார்வையிட்டதோடு, அடுத்த ஆண்டு தமது வீதி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக அந்த வீதியை மக்கள் போக்குவரத்துக்கு ஏற்றவகையில் புனரமைத்துத் தருவதாகத் தெரிவித்தார்.

Read more...

புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் உயிரிழந்த போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன

வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களின் ஆலோசனையின் கீழ் கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் யுத்தத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார செயற்றிட்டத்தில் இரண்டாம் கட்ட உதவி வழங்கும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

Read more...

வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் ஆண்டு இறுதி திட்ட மீளாய்வுக் கூட்டம்

வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் 2015 ஆம் ஆண்டுக்கான திட்ட மீளாய்வுக் கூட்டம் மீன்பிடி, போக்குவரத்து, வீதி அபிவிருத்தி  அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்கள் தலைமையில் 07 டிசெம்பர் 2015 அன்று குருநகர் வீதியிலுள்ள அபிவிருத்தி திணைக்கள மண்டபத்தில் இடம்பெற்றது.

Read more...