செயலாளர்

திருமதி.ஆர்.வரதலிங்கம்

செயலாளர்

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு

இல.4, புறூடி ஒழுங்கை, 
புங்கன்குளம் சந்தி  கண்டி வீதி,
அரியாலை, யாழ்ப்பாணம்

 

தொ.பே.: +94-21-222 0880
தொ.நகல்: +94-21-222 0882

மின்னஞ்சல்:
npminagri@yahoo.com

contact1

மகளிர் விவகார அமைச்சினால் மெழுகுவர்த்தி உற்பத்திற்கான வாழ்வாதார உதவி

மெழுகுதிரி உற்பத்தியில் 04 பேர் கொண்ட குழுவாக ஈடுபடும் பெண் தலைமைத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களுக்கு 2018ம் ஆண்டு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதியூட்டத்தினூடாக உற்பத்தியினை விஸ்தரிப்பதற்கான உற்பத்தி உபகரணங்கள், தளபாடங்கள் மற்றும் கொட்டகை அமைப்பதற்கான நிதி ஆகிய உதவிகள் வடமாகாணம், மகளிர் விவகார அமைச்சினூடாக அண்மையில் வழங்கப்பட்டது.

Read more...

வாழைநார் பிரித்தெடுக்கும் இயந்திரம் லோட்டஸ் தொழில் முயற்சியாளர்கள் குழுவிற்கு வழங்கப்பட்டது

சமூக மட்ட அமைப்புக்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டத்தில் வாழைநார் சார் உற்பத்தியில் ஈடுபடும் கன்னட்டி வெங்கலச்செட்டிக்குளத்தினைச் சேர்ந்த 12 பேர் கொண்ட குழுக்களாக ஈடுபடும் லோட்டஸ் தொழில் முயற்சியாயர்ளுக்கு 2018ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட மூலதன நிதியினூடாக (PSDG)ரூபா 445,000.00 பெறுமதியான வாழைநார் பிரித்தெடுக்கும் இயந்திரம் எமது அமைச்சினூடாக வழங்கப்பட்டது.

Read more...

2019 ஆம் ஆண்டின் அரச முதியோர் இல்லத்தின் நிகழ்வுகள்.

புத்தாண்டு தினத்தன்று ஆரோக்கிய விநாயகர் சமேத நிற்சிங்க வைரவர் ஆலயத்தில் விசேட பூசைகளும் தேசியக் கொடியேற்றலுடனான சத்தியப்பிரமாண நிகழ்வுகளும் மூத்தோர்கள், உத்தியோகத்தர்களால் இணைந்து செயற்படுத்தப்பட்டது. இத் தினத்தில் உள மேம்பாட்டிற்காகவும், மகிழ்வான எதிர்காலத்தை நோக்கியதான விழிப்புணர்விற்காகவும் நிகழ்வுகள் ஏற்படுத்தப்பட்டன.

Read more...

பெண் தலைமைத்துவக்  குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் - யாழ்ப்பாணம்

பெண் தலைமைத்துவக்  குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட வாழ்வாதார உதவிப் பொருட்கள் விநியோக  நிகழ்வானது 2018.12.12 ஆம் திகதி  அன்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்களின் வழிகாட்டலில் மகளிர் விவகார அமைச்சு யாழ்ப்பாணத்தில்; நடைபெற்றது. 

Read more...

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட அமைப்புகளுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் - வெண்கலச்செட்டிகுளம்

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட அமைப்புகளுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் விநியோக  நிகழ்வானது 2018.12.14 ஆம் திகதி  அன்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்களின் வழிகாட்டலில் ஏஞ்சல் மெழுகுதிரி உற்பத்தியாளர் குழு மண்டபம், கன்னாட்டி, வெண்கலச்செட்டிகுளத்தில் நடைபெற்றது.

Read more...

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட அமைப்புக்களுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் - சாவற்காடு

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் கௌரவ அனந்தி சசிதரன் அவர்களால் சாவற்காட்டு பகுதியைச் சேர்ந்த முப்பத்தொரு பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட பனை சார் கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்யும்  சாவற்காட்டு மகளீர் செயற்பாட்டுக் குழு, மன்னார் என்ற அமைப்பிற்கு அவர்களின் உற்பத்தியினை மேலும் விருத்தி செய்வதற்கென (மூலதன அடிப்படையிலான பிரமாண நிதி ஒதுக்கீட்டின் கீழ்) ரூபா.191,550 பெறுமதியான மூலப் பொருட்கள்  2018/10/12 அன்று வழங்கப்பட்டது.

Read more...