செயலாளர்

திருமதி.ஆர்.வரதலிங்கம்

செயலாளர்

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு

இல.4, புறூடி ஒழுங்கை, 
புங்கன்குளம் சந்தி  கண்டி வீதி,
அரியாலை, யாழ்ப்பாணம்

 

தொ.பே.: +94-21-222 0880
தொ.நகல்: +94-21-222 0882

மின்னஞ்சல்:
npminagri@yahoo.com

contact1

யாழ்ப்பாணத்திலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல்

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் கௌரவ அனந்தி சசிதரன் அவர்களால் யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், சண்டிலிப்பாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 14 பெண் தலைமைத்துவக் குடும்பங்களிற்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கென (மூலதன அடிப்படையிலான பிரமாண நிதி ஒதுக்கீட்டின் கீழ்) ரூபா.702,974 பெறுமதியான சிறு கைத்தொழில், கோழி வளர்ப்பு, வீட்டுத்தோட்டம் மற்றும் உணவு தயாரித்தல் போன்றவற்றிற்கான மூலப் பொருட்கள்  13.07.2018 அன்று அமைச்சு அலுவலக வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

Read more...

வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார்

மானிப்பாய்  பிரதேச வைத்தியசாலையின் பால் ஊட்டும் தாய்மார்களுக்கென புதிதாக அமைக்கப்படவுள்ள கட்டடத்திற்கான அடிக்கல்  நாட்டும்  விழா  14 யூன் 2018 அன்று நோயாளர்  நலன்புரிச் சங்க தலைவர் தலைமையில்  இடம்பெற்றது.

Read more...

கூட்டுறவுப் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையினை வடமாகாண கூட்டுறவு அமைச்சர் வழங்கிவைத்தார்

கூட்டுறவுப் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை  வழங்கி வைக்கும் நிகழ்வானது வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொ.வாகீசன் தலைமையில் 13 யூன் 2018 அன்று மகளிர் விவகார அமைச்சரின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

Read more...

வடமாகாண பெண்கள் வலுவூட்டல் மற்றும் கொள்கை வகுப்பாக்க செயலமர்வு

வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரனையுடன் வட மாகாண பெண்கள் வலுவூட்டல் பயிற்சிப்பட்டறையும் கொள்கை வகுப்பாக்க செயலமர்வும் 08 யூன் 2018 அன்று யாழ் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

Read more...

தெல்லிப்பளை பலநோக்குகூட்டுறவுச் சங்க நெசவு நிலையம் வடமாகாண தொழிற்துறை மற்றும் தொழில் முனைவோர் அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது

கிராமமட்டங்களில் சுயதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக வடக்கு மாகாணசபையின் தொழிற்துறைத் திணைக்களத்தினால் தெல்லிப்பளை வீமன்காமத்தில் அமைக்கப்பட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்க கைத்தறி நெசவு நிலையமானது வடமாகாண மகளிர் விவகாரம் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் அமைச்சர் அனந்தி சசிதரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Read more...