செயலாளர்

திருமதி.ஆர்.வரதலிங்கம்

செயலாளர்

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு

இல.4, புறூடி ஒழுங்கை, 
புங்கன்குளம் சந்தி  கண்டி வீதி,
அரியாலை, யாழ்ப்பாணம்

 

தொ.பே.: +94-21-222 0880
தொ.நகல்: +94-21-222 0882

மின்னஞ்சல்:
npminagri@yahoo.com

contact1

ILO நிறுவனத்தின் நிதி உதவியுடன் வடமாகாண கூட்டுறவு அமைச்சினூடாக நுண்கடன் திட்டம்

யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கூட்டுறவுத் துறையினை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் வடமாகாண கூட்டுறவு அமைச்சும் ILO நிறுவனமும் இணைந்து குறைந்த வட்டியில் நுண்கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

Read more...

பனை அபிவிருத்தி வாரம் தொடர்பான கலந்துரையாடல்

வடக்கு மாகாண பனை அபிவிருத்தி வாரத்தை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற பனை அபிவிருத்தி கண்காட்சி ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலானது யாழ் பொதுநூலக மாநாட்டு மண்டபத்தில் 01 யூன் 2018 அன்று வடமாகாண மகளிர் விவகார மற்றும் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

Read more...

சீமா விளையாட்டுக் கழகத்திற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் மீசாலை வடக்கு சாவகச்சேரியில் அமைந்துள்ள சீமா விளையாட்டுக் கழகத்திற்கு ரூபா இருபத்தையாயிரம் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் (2017 ஆம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் கீழ்) யாழ்ப்பாண விளையாட்டுத் திணைக்கள வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

Read more...

2ஆவது ஆலோசனைக்குழுக் கூட்டம் - 2018

மகளிர் விவகார அமைச்சின் இரண்டாவது ஆலோசனைக்குழுக் கூட்டம் 2018.04.12 அன்று அமைச்சர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சர் அனந்தி சசிதரன், மகளிர் விவகார அமைச்சு அவர்கள் தலைமை தாங்கி நடாத்திய இக் கூட்டத்தில் அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் செயற்பாடுகள் மீளாய்வு செய்யப்பட்டது. திணைக்களங்களில் சிறப்பான செயற்பாட்டுக்கு தடையாகவுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு சில ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டது.

Read more...

பிரிவுபசார நிகழ்வு

மகளிர் விவகார அமைச்சில் செயலாளராகச் சேவையாற்றி,  வடக்கு மாகாண சபை பேரவைச் செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஆர்.வரதீஸ்வரன் அவர்களுக்கு அவர்களின்; சேவையினைப் பாராட்டி கௌரவிக்கும் முகமாக மகளிர் விவகார அமைச்சர் கௌரவ அனந்தி சசிதரன் அவர்களின் தலைமையில் பிரிவுபசார நிகழ்வொன்று அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Read more...

பெண்களின் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு

மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களில் இருந்து பெண்கள் தம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பான விழிப்புனர்வுச் செயலமர்வு 2018.04.07 ஆம் திகதி யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரியில் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் கௌரவ அனந்தி சசிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

Read more...